இத்தாலியா நடிகையும், அழகியுமான மோனிகா பெலூசி உலகப் புகழ் பெற்றவர். வயதானாலும் இன்னும் இளமையான தோற்றத்துடன் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். இத்தாலி, அமெரிக்கா, பிரெஞ்சு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளவர்.

இவரது ரசிகர்களான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் ‘கூலி’ படத்தில் இடம்பெற வைத்த ‘மோனிகா’ என்று துவங்கும் இந்தப் பாடலின் லின்க், மோனிகா பெலூசிக்கு அனுப்பப்பட்டு அவர் பாடலை ரசித்ததாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சமீபத்தில் பூஜா ஹெக்டே அளித்த பேட்டியில் அவரைப் பேட்டி எடுத்தவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பூஜா ஹெக்டே பேசுகையில், இதுதான் இதுவரைக்கும் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு. உண்மையில் நான் மோனிகா பெலூசியை நேசிக்கிறேன். அவர் இதை ரசித்தது எனக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.