Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தயாராகிறதா சிவா மனசுல சக்தி இரண்டாம் பாகம்? ஆனா ஹீரோ இவராம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடித்துள்ள “பிரதர்” படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம். இந்த படம் வருகிற தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2009ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த தனது முதல் படம் “சிவா மனசுல சக்தி” என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை 15 ஆண்டுகள் கழித்து இயக்க Rajesh.M தயார் நிலையில் உள்ளார்.

இப்படத்தின் திரைக்கதை வேலைகளை அவர் முடித்து விட்டார். மேலும், “சிவா மனசுல சக்தி” படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், இப்போது சந்தானம் ஹீரோவாகி விட்டதால், அவருக்கு பதிலாக இந்த படத்தில் யோகி பாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம்.

- Advertisement -

Read more

Local News