Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

ரவி மோகனின் ‘கராத்தே பாபு’… மாஸான பேச்சு… வைரலாகும் டீஸர்!!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடக்கத்திலிருந்தே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். தற்போது அவர் ‘ஜீனி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ரவி மோகனின் 34வது படத்துக்கு தற்காலிகமாக ‘ஆர். எம் 34’ என்று பெயரிடப்பட்டது. இப்படத்தை ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி வருகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கின்ற இப்படத்துக்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் சக்தி மற்றும் காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக தவ்தி ஜிவால் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது, ‘ஆர். எம் 34’ படக்குழு டைட்டில் டீஸரை வெளியிட்டது. அதன்படி, இப்படத்திற்கு ‘கராத்தே பாபு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சட்டசபையில் ரவி மோகனின் எம்எல்ஏவாக உரையாற்றுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரவி மோகன் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்துவரும் நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த டீஸர் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News