Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

எம்மதமும் சம்மதம் என்றவாறு மக்களை நெகிழ வைத்த ராம் சரண்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க, இசையமைப்பாளராக தமன் பணியாற்றியுள்ளார்.

கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஊழலுக்கு எதிராக போராடும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

இந்த படம், பொங்கலுக்கு, ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ராம் சரண் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்தார். அதேவேளையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன்பீர் தர்காவில் நடைபெற்ற 80வது தேசிய முஷைரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிபாடு செய்துள்ளார். மேலும், துர்கா தேவி கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்துள்ளார்.இதை அறிந்த ரசிகர்கள், கடப்பா நகரம் முழுவதும் திரண்டு ராம் சரணுக்கு மிகுந்த வரவேற்பு அளித்தனர்.

- Advertisement -

Read more

Local News