நடிகர்கள் பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்திருக்கும் படம் ‘ராஜபுத்திரன்’. இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார். கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு நவ்பால் ராஜா இசையமைக்க, கன்னட நடிகர் கோமல் குமார் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார்.

90களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், காதலும், தந்தை-மகன் பாச போராட்டத்தையும் உணர்த்தும் என இயக்குநர் மகா கந்தன் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு அனுபவத்தைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் முழுக்க முழுக்க படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். இப்படம் குடும்பத்தினருடன் பார்க்கும் அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும். ‘ராஜபுத்திரன்’ அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர உள்ளது.” என்று உறுதிபடுத்தியுள்ளார்.