இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
இதற்கிடையில், ரஜினிகாந்தின் அடுத்த படமான 173வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது. இப்படம் 2027ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், காற்றாய் அலைந்த நம்மை தனதாக்கியது.இரு பனிப் பாறைகள் உருகி வழிந்த இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் அலையாய் மாறுவோம். நமைக் காத்த செம்புலம் நனைக்க நாழும் பொழிவோம், மகிழ்வோம்! வாழ்க நாம் பிறந்த கலைமண்.” என் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். 28 வருடங்களுக்கு முன்பு ரஜினியை வைத்து ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கியிருந்தார் சுந்தர் சி என்பது குறிப்பிடத்தக்கது.

