ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர்’ திரைப்படம் வருகிற 21-ம் தேதி ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏற்கெனவே அதிகளவிலான வசூலை ஈட்டிய `ஜெயிலர்’ திரைப்படம் ஜப்பானில் வெளிவருவதன் மூலம் இன்னும் அதிகப்படியான வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானில் `முத்து’ திரைப்படத்தை தாண்டி எஸ்.எஸ். ராஜமெளலியின் `ஆர். ஆர். ஆர்’, `பாகுபலி – 2′ போன்ற திரைப்படங்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த `மகாராஜா’ திரைப்படமும் ஜப்பானில் வெளியானது.
