Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

என் தோள்ல கைப்போட்டு ‘தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறேன்னு சொன்னார் ரஜினி சார்… வேட்டையன் பட வில்லன் சாபுமோன் நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த. செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் வைரலாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்தப் படத்தில் மலையாள நடிகர் சாபுமோன் அப்துசமத் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது இவரின் முதல் தமிழ் படம் என்பதோடு, ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.  

“படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஞானவேல், என்னை ரஜினி சாருடன் அறிமுகம் செய்தார். அப்போது, ரஜினிகாந்த் எழுந்து நின்று ‘சார்’ என்று அழைத்தார். அந்த முறை என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, எனக்கு ஒரு சில நொடிகளுக்கு பேச்சே வரவில்லை. பிறகு, அவர் என் தோளில் தட்டி ஆறுதல் கூறினார். அப்போது தான் எனக்கு புரிந்தது, தமிழ் ரசிகர்களின் மனதில் அவர் எப்படி இத்தனை பெரிய இடத்தைப் பிடித்தார் என்று.  

இது என்னுடைய முதல் தமிழ் படம் என்பதை அறிந்திருந்தும், அவர் எனது தோளில் கைப்போட்டு கொண்டு ‘தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறேன்’ என்றார். எட்டு நாட்கள் அவர் உடன் படப்பிடிப்பில் இருந்தாலும், அவருடன் ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை. ஆனால் அவர் கூறிய வார்த்தைகள் என் நினைவில் என்றும் இருக்கும். உண்மையிலேயே இது என் வாழ்க்கையின் சிறந்த தருணமாகும்,” என்று சாபுமோன் கூறினார். 

- Advertisement -

Read more

Local News