டி.வி நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் ராகவ் ரங்கநாதன். ‘ஜெர்ரி, வட்டாரம், சத்தம் போடாதே, சக்கரவியூகம், சிலம்பாட்டம், எந்திரன், நானே என்னுள் இல்லை, வேலாயுதம், டிக்கெட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘நஞ்சுபுரம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராகவ் ரங்கநாதன் இயக்குனராகி உள்ளார். அவர் எழுதி இயக்கியுள்ள படம், ‘நாக் நாக்’. இல்லுஷன்ஸ் இன்பினிட் சார்பில் தயாராகியுள்ள இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ‘பட்டாம்பூச்சி’ நவீன் சுந்தர் இசை அமைத்துள்ளார்.
