‘கபாலி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான ராதிகா ஆப்தே, எதற்கும் கவலைப்படாமல் தனக்கு விருப்பமானவற்றை செய்வதில் தனித்துவம் கொண்டவர். இதற்கு முன்பாகவும் சமூக வலைத்தளங்களில் சில சர்ச்சைக்குரிய பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

ஒரு குழந்தையை பெற்ற பிறகு, அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்வாக லண்டனில் நடைபெற்ற ‘பாப்டா’ விருதளிப்பு விழா அமைந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட ராதிகா ஆப்தே, பாப்டா’வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அந்நேரம் எனது தாய்ப்பாலை பம்ப் செய்ய வேண்டிய நேரமாக இருந்தது. நிகழ்ச்சிக்கான அழைப்பை ஏற்பாடு செய்த நடாஷா, எனக்காக வாஷ்ரூமிற்கு கூடவே வந்தார், மேலும் எனக்கு ஓய்வெடுக்க ஷாம்பெயினையும் கொண்டு வந்தார்!” என தெரிவித்துள்ளார்.

“ஒரு புதிய தாயாக இருப்பதும், அதே நேரத்தில் வேலை செய்ய வேண்டிய சூழலும் மிகவும் கடினமானது. இந்த அளவிற்கு ஒருவருக்காக கவனித்துக்கொள்வது எங்கள் திரைத்துறையில் மிகவும் அபூர்வமான விஷயமாகும். இது பாராட்டத்தக்க ஒரு செயல், என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ராதிகா ஆப்தே வெளியிட்ட இந்தப் பதிவு மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.