Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

சசிகுமார் – நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘ராஜ வம்சம்’ மார்ச் 12-ம் தேதி வெளியாகிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.டி.ராஜா தயாரித்துள்ள திரைப்படம் ‘ராஜ வம்சம்.’

இந்தப் படத்தில் கதாநாயகனாக இயக்குரும், நடிகருமான சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், டம்ஸ், சரவணா, சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணிமேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49  கலைஞர்கள் நடித்துள்ளனர்.

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார். கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத் தொகுப்பினை சபு  ஜோசப் மேற்கொண்டுள்ளார். நிர்வாக தயாரிப்பு – N.சிவகுமார், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன் பரமசிவம்.

இந்தப் படத்தில் பெயர் சொல்லும் அளவுக்குப் பிரபலமான 49 நடிகர், நடிகைகள் நடித்துள்ளது சிறப்பம்சமாகும். தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குநர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் சுந்தர்.C. அவரிடம் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்ற இயக்குநர் கதிர்வேலுதான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த ராஜ வம்சம் திரைப்படம் வரும் மார்ச் 12-ம் தேதி  திரைக்கு வருகிறது.

- Advertisement -

Read more

Local News