Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

‘புஷ்பா 3’ நிச்சயம் உருவாகும்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் சுகுமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணியில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா: தி ரூல்’ மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2023 நவம்பரில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ (புஷ்பா 2) படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், ஜெகபதி பாபு, சுனில் உள்ளிட்டோர் நடித்தனர். இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றதோடு, ரூ.1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது. 

இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் புஷ்பா 3 உருவாக வாய்ப்பில்லை என செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில், சமீபத்தில் துபாயில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சுகுமார், ‘புஷ்பா3’ கண்டிப்பாக உருவாகும் காத்திருங்கள் நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சுகுமார், ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இப்படங்களை இருவரும் முடித்தபின் ‘புஷ்பா3’ உருவாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News