Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஒருநாள் முன்னதாகவே வெளியாகிறது புஷ்பா 2 திரைப்படம்… புஷ்பா 3 பாகமும் உருவாகுமாம்! #PUSHPA 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதலில் அறிவித்திருந்த டிசம்பர் 6ம் தேதிக்கு பதிலாக, படத்தை டிசம்பர் 5ம் தேதியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்டரில், ‘புகையிலை பைப்’ பிடித்தபடி, கையில் துப்பாக்கியை பிடித்திருக்கும் அல்லு அர்ஜுனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

மேலும், இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்கள் சந்திப்பில், புஷ்பா 3 உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த தயாரிப்பாளர், ‘புஷ்பா 3 கண்டிப்பாக உருவாகும், இந்தப் படத்தின் இறுதியில் அதற்கான லீட் இருக்கும். இது மிகச் சிறப்பாக அமையும்’ என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News