2021 ஆம் ஆண்டு, இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம் வெளியாகியது. இப்படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகுந்த வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ‘புஷ்பா 2: தி ரூல்’ எனும் இரண்டாம் பாகம் கடந்த 5 ஆம் தேதி திரைக்கு வந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார், மேலும் சாம் சி.எஸ் பின்னணி இசை வழங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில், ‘டான்சிங் குயின்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீலீலா ‘கிஸ்சிக்’ என்ற பாடலுக்கு பிரமாண்டமான நடனத்தை வழங்கியிருந்தார்.
இப்படம் தற்போது உலகளவில் ரூ. 1850 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படம் விரைவில் ரூ. 2000 கோடி வசூல் செய்து சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த வகையில், படக்குழு தற்போது ‘புஷ்பா 2’ மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.