Touring Talkies
100% Cinema

Thursday, June 19, 2025

Touring Talkies

தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் சாதனை படைத்த புஷ்பா 2!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் 2024ம் ஆண்டு வெளிவந்த படம் ‘புஷ்பா 2’. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்தது. மொத்தமாக 1800 கோடி வரை வசூலித்த இந்தப் படத்தின் ஹிந்தி வசூல் மட்டுமே 800 கோடியாக அமைந்து புதிய சாதனையைப் படைத்தது.’புஷ்பா 2′ படம் சமீபத்தில் டிவியில், ஹிந்தியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது. அதன் ரேட்டிங் 5.1 ஆக அமைந்து 5 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது.சமீபத்தில் ஹிந்தியில் ஒளிபரப்பான படங்களில் நேரடி ஹிந்திப் படங்களான ‘கட்டார் 2, ஜவான்’ படங்களுக்குப் பிறகு மூன்றாவது ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. அதோடு, ‘பதான், அனிமல்’ ஆகிய படங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

- Advertisement -

Read more

Local News