ஜெயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து, தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார். இதற்கிடையில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார், அதன் முதலாவது படமாக புரோ கோட் உருவாகிறது. அடுத்ததாக, அவர் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரவி மோகனே தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு அன் ஆர்டினரி மேன் என்ற தலைப்பை வைத்துள்ளனர். தற்போது, ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை மாலை 6 மணிக்கு இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாக உள்ளது.