மார்கோ படத்தின் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “இந்த படம் வன்முறையை ஆதரிக்கும் படம் இல்லை. ஒரு கதை சொல்லும் முறை.. அவ்வளவுதான்.. இதற்கு முன்பும் கூட இதே போன்று வன்முறை காட்சிகள் நிறைந்த படங்கள் எச்சரிக்கை வாசகங்களுடன் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் மார்கோ படத்திற்கு நிறைய எதிர்ப்புகள் எழுந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இனிவரும் நாட்களில் இது போன்ற வன்முறை படங்களை நான் ஒருபோதும் தயாரிக்க மாட்டேன் என உறுதியாக கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்.சாட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரங்களில் ஏற்பட்ட பாதிப்பு, கேரள முதல்வரின் கடும் எதிர்ப்பு ஆகியவை தான் அவரை இவ்வாறு முடிவெடுக்க வைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
