தமிழில் வெளியான முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரையிடும் முயற்சி இப்போது அதிகரித்துள்ளது. இதற்காக ஏற்கனவே ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்பட்டன.
இந்த தொடர் முயற்சியில், விஜய் நடித்த ‘கில்லி’ படமும் சமீபத்தில் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, விஜயின் மற்றொரு ஹிட் படமான ‘சச்சின்’ படத்தையும் டிஜிட்டலாக புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டுவரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ‘சச்சின்’ படம், வரும் அடுத்த மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டுள்ளார்.