நடிகை பிரியங்கா மோகன், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இளம் நட்சத்திரம். தற்போது ஒரு புதிய வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய வெப் தொடரில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது கொரியாவில் நடைபெற்று வருகிறது.
இதற்கான ஒளிபரப்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.