Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ராகவா லாரன்ஸூக்கு பென்ஸ் படத்தில் ஜோடியாகிறாரா பிரியங்கா மோகன்? #BENZ

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானாவர் பிரியங்கா மோகன். தற்போது ஜெயம் ரவி உடன் ‛பிரதர்’ படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2வது படமாக ‘பென்ஸ்’ என்ற படத்தின் அறிவிப்பு வந்தது.

லோகேஷ் கதையில் உருவாகும் இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கின்றார். தற்போது இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் கமிட்டாகி ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News