கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடிகர் பிரித்விராஜ், தான் இயக்கி வந்த லுசிபர் திரைப்படத்தின் வேலைகள் ஒரு பக்கம் தான் தெலுங்கில் நடித்த சலார் படத்தின் பணிகள் ஒரு பக்கம் மற்றும் குருவாயூர் அம்பல நடையில் உள்ளிட்ட சில படங்களில் பிசியாக பணியாற்றி வந்தார். இதற்கிடையே ஹிந்தியில் படே மியான் சோட்டே மியான் என்கிற படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் தற்போது சத்தமே காட்டாமல் சர்ஷமீன் என்கிற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் பிரித்விராஜ். ஆனால் இந்த படம் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக ஜூலை 25ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.
