நடிகர் பிரித்விராஜ் நடிப்பு இயக்கம் என பிசியாக உள்ளார். தற்போது “சர்ஜமீன்” என்ற ஹிந்தி வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். இந்த தொடர் ஜூலை 25ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது. தற்போது அவர் தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் வில்லனாகவும் பணியாற்றி வருகிறார்.

அதே நேரத்தில், மலையாளத்தில் உருவாகவுள்ள “கலிபா” என்ற படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை “புலி முருகன்” படத்தின் இயக்குநர் வைசாக் இயக்குகிறார்.
2010ல் வெளியான “போக்கிரி ராஜா” திரைப்படத்தில் பிரித்விராஜை இயக்கி இயக்குநராக அறிமுகமானவரே வைசாக். இப்போது, சுமார் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரித்விராஜை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு ஆகஸ்ட் 6ஆம் தேதி லண்டனில் தொடங்கவுள்ளது.