Saturday, February 1, 2025

வாழ்வியல் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரேம்ஜி நடிக்கும் வல்லமை… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்-ஐ வெளியிட்ட வெங்கட்பிரபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் அதிகம் நடித்துவரும் நடிகர் பிரேம்ஜி, விஜய் நடித்த தி கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, அவர் கதாநாயகனாக வல்லமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்தின் திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு ஆகிய அனைத்தையும் கருப்பையா முருகன் மேற்கொண்டுள்ளார்.

படத்தின் முதல் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதில், பிரேம்ஜி, ஒரு பள்ளிக்கூட சிறுமியுடன் டிவிஸ் வண்டியை ஓட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த படத்தின் ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் ஜிகேவி இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பை கணேஷ் குமார் செய்துள்ளார். படத்தைச் சார்ந்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News