மலையாளத்தில் வெளியான ‛பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. தமிழில் ‛ரெபல்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது, விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில், பல படங்களில் நடிக்க அவரிடம் பேசப்பட்டு வருகிறது. இப்போது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக, விஜய் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்குகிறது. இந்த படத்தில் பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது, மூன்றாவது முக்கிய கதாபாத்திரமாக நடிகை மமிதா பைஜூ இந்த படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்க உள்ள இந்த படம், அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. பெங்களூரு அடிப்படையாக கொண்ட கேவிஎன் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.