தமிழில் ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதையடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐகே (LIK) என்ற புதிய திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கும் மற்றொரு புதிய திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜூ நடிக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. மேலும், இந்த படத்திற்கு இசையை சாய் அபயங்கர் அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.