பாலிவுட்டில் கடந்த வருடம் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் ‘ப்ரெட்டி பாட்டில்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் உபேந்திரா லிமாயே, தனது உணர்ச்சிகரமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.தான் கடந்த 25 ஆண்டுகளாக மராத்தி மற்றும் ஹிந்தி மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன் விஷால் நடித்த ‘சிவப்பதிகாரம்’ திரைப்படத்தில் தமிழில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த வருடம், வெங்கடேஷ் நடிப்பில் வெளியான ‘சங்கராந்திக்கு வஸ்துனம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் தன்னுடைய அறிமுகத்தை பதிவு செய்துள்ளார்.தற்போது, முதல் முறையாக கன்னட திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே உபேந்திரா எனும் பிரபல நடிகர் கன்னடத்தில் இருப்பதாலும், இப்போது புதிதாக நுழைந்த பாலிவுட் நடிகர் உபேந்திரா, நடிகர் ரிஷி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்தில் அவர் ஒரு சப்தத்தை கேட்டவுடனே செயல்களில் மாற்றம் ஏற்படும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லன் என்றாலும், அவர் நடிக்கும் வேடத்தில் சிறு அளவில் நகைச்சுவை கலந்திருக்கும். இந்த படத்தை இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளராக இருந்த கிஷோர் இயக்கி வருகிறார்.கன்னடத்தில் நடிப்பது குறித்தும், மராத்தி நடிகரான உபேந்திரா கூறும்போது, “கன்னடம் என் தாய்மொழி” என தெரிவித்துள்ளார்.

