மலையாள சினிமாவில் குணசித்ர நடிகராக அறியப்பட்டவர் விஷ்ணு பிரசாத். அண்ணன், தம்பி, மாதிரியான கேரக்டர்களில் நடித்து வந்தார். மாம்பழ காலம், ரன்வே, பென் ஜான்சன், பதாகா, மராத்தானாடு உள்ளிட்ட படங்களிலும் மற்றும் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் ‘காசி’ என்ற படத்தில் நடித்தார்.
48 வயதான விஷ்ணு பிரசாத் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
