‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘உருவாகியுள்ள திரைப்படம் ‘கூலி’. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ வேடத்தில் இடம்பெற்றுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே, ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலாக வெளியாகிய ‘சிக்கிட்டு’ பாடல் சமீபத்தில் வெளியானதும் இணையத்தில் வைரலானது. அதன் தொடர்ச்சியாக, இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கும் ‘மோனிகா’ என்ற பாடல், வருகிற ஜூலை 11-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.