Wednesday, October 2, 2024

பீஸ்ட் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை விஜய்யுடன் இணைந்த பூஜா ஹெக்டே ! #Thalapathy69

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் “முகமூடி” படத்தின் மூலம் தனது நடிப்பை அறிமுகம் செய்தவர் நடிகை பூஜா ஹெக்டே. அந்த படத்துக்குப் பிறகு, அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் விஜய்யின் “பீஸ்ட்” படத்தில் நடித்தார். தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44வது படத்தில் தனது நடிப்பை முடித்துள்ளார்.

இந்நிலையில், கோட் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் வினோத் இயக்கவுள்ள படம் “தளபதி 69”. கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரிரு நாட்களில் தொடங்க உள்ளது. நேற்று முதல், இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஹிந்தி நடிகர் பாபி தியோல் இப்படத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இன்று, நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் நாயகியாக நடிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் கதைக்களம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாக உள்ளது, மேலும் இதில் பல முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளனர். அவற்றின் அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News