Friday, October 4, 2024

மோகன்லாலுடன் இணையும் பொன்னியின் செல்வன் பட நாயகியும், பூவே உனக்காக பட நாயகியும் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படங்கள் அனைத்தும் அவரின் நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவதற்கே பிரபலமாக இருக்கும். இப்படியாக நாடோடி காட்டு, பட்டிணப்பிரவேசம், ரசதந்திரம், சிநேக வீடு போன்ற பல படங்கள் இவர்கள் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றிகளை கண்டுள்ளன.

இந்த நிலையில், 2015ல் இவர்கள் கூட்டணியில் வெளியான என்னும் எப்பொழும் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் 9 வருட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்திற்காக இவர்கள் இணைந்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்த இயக்குனர் சத்யன் அந்திக்காடு, இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார் என்கிற தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மலையாளத்தில் மாய நதி, கடந்த வருடங்களில் தமிழில் வெளியான கட்டாகுஸ்தி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, இந்த படத்திலும் அதேபோல் ஒரு பலமான கதாபாத்திரத்தில் மோகன்லாலுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். மேலும், சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘பூவே உனக்காக’ திரைப்படத்தின் நடிகை சங்கீதாவும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

Read more

Local News