சின்னத்திரை நடிகை பவித்ரா ஜனனி, பிக்பாஸ் சீசன் 8ல் சிறப்பாக விளையாடி நான்காவது இடத்தை பெற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டில் அவர் காட்டிய விளையாட்டு பெரிதாக பேசப்பட்டது. நிஜ வாழ்வில் பயணங்களை மிகவும் விரும்பும் பவித்ரா ஜனனி, அண்மையில் ராயனுடன் சேர்ந்து டிரெக்கிங் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சிலர் இருவரைப் பற்றியும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால், கோபமடைந்த பவித்ரா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் இருதரப்பு ரசிகர்களுக்கும், சில ரசிகர் பக்கங்களுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158365-1024x647.png)
அந்த பதிவில், “சில விஷயங்களை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அதை புரிந்து கொண்டு நடப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, நண்பர்கள், மற்றும் அவர்களுடன் பயணம் செல்வது எனது சொந்த விருப்பம். சூழ்நிலையை சரியாக புரிந்துகொள்ளாமல் சிலர் பதிவிடும் கருத்துக்கள் எனக்கு விருப்பமில்லை.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158360-1-1024x649.png)
நீங்கள் பிக்பாஸ் வீட்டில் சில ஜோடிகளை ரசித்திருக்கலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அனைவருக்கும் அவர்களுக்கே உரிய தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. நிகழ்ச்சி தரும் அனுபவத்திற்கும் உண்மையான வாழ்க்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதை நீங்கள் புரிந்து மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து எங்களுக்கான தனியிடத்தை கொடுங்கள் என பவித்ரா தெரிவித்துள்ளார்.