Tuesday, January 21, 2025

அடுத்த படத்திலாவது எனக்கு வேறு பெயர் வையுங்கள் சார் – சுந்தர் சி-க்கு அஞ்சலி வைத்த வேண்டுகோள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் ‛மதகஜராஜா’. 2013 ஆம் ஆண்டு வெளியாவதாக இருந்த நிலையில், சில பிரச்னைகள் காரணமாக நீண்ட காலமாக முடங்கி கிடந்தது. 12 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியானபோதும், ரசிகர்கள் அதே எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அதேபோல், இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கும் பத்திரிகை, மீடியா மற்றும் சமூக ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை நகரத்தில் நடைபெற்றது. இதில் சுந்தர் சி, விஷால், அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகை அஞ்சலி பேசும்போது, ‛‛ஒரு நல்ல படம் 12 ஆண்டுகள் கழித்து வந்தாலும் கூட மக்கள் அதை வரவேற்பார்கள் என்பதை மதகஜராஜா படத்தின் வெற்றி நிரூபித்திருக்கிறது. பல தியேட்டர்களில் நானும் நேரில் சென்று அதைக் கண்கூடாக பார்த்தேன். இயக்குநர் சுந்தர் சியை நான் 12 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன். மதகஜராஜா எப்போது வந்தாலும் ஓடும் என்று நான் மட்டுமல்ல, எங்கள் டீமில் இருக்கும் அனைவருமே சொல்லிக் கொண்டிருப்பார்கள். இது நாங்கள் படத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையையே காட்டுகிறது.

கலகலப்பு படத்தை தொடர்ந்து மீண்டும் உடனே சுந்தர் சி இயக்கத்தில் இணைந்து நடித்த படம் இந்த மதகஜராஜா. கலகலப்பு படத்தைப் போலவே மதகஜராஜா படத்தையும் ஒரு ரசிகையாக நான் முழுமையாக கொண்டாடினேன். ஆனால் இந்த இரண்டு படங்களிலும் என்னுடைய பெயர் மாதவி தான். அடுத்த படத்திலாவது எனக்கு வேறு பெயர் வையுங்கள் சார்.

டியர் லவ்வரு பாடல் மதகஜராஜா படத்தில் முக்கிய பாடலாக அமைந்துள்ளது. அங்காடித்தெரு படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரிச்சர்டுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இப்போது கூட மற்றொரு படத்திற்காக நாம் சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். நாங்கள் அடிக்கடி பேசும் போது மதகஜராஜா பற்றித்தான் பேசுவோம். விஜய் ஆண்டனியின் பாடல்களுக்கு நான் ரசிகை. இந்த படத்தில் டியர் லவ்வரு, சிக்குபுக்கு என இரண்டு பாடல்களுமே என்னுடைய பிடித்த பாடல்களாக உள்ளன” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News