Monday, October 28, 2024

என் கன்னத்தை கிள்ளி பாருங்கள்… அதில் பிளாஸ்டிக் இல்லை என்று தெரியும்… விமர்சனங்களுக்கு நயன்தாரா பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நயன்தாரா, ‘9’ என்ற தனது சொந்த ஃபேஷன் பிராண்டை உருவாக்கி, இந்த தொழிலில் அதிகப்படியான வளர்ச்சியை நோக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இன்று மும்பையில், தனது பிராண்டின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அழகான உடையணிந்து மேடையில் நயன்தாரா நடைபோட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நிகழ்ச்சியில் பேசிய போது, தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் மாற்றியுள்ளதாக வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். தன்னுடைய முகத்தில் மாற்றம் அவரது உணவு பழக்கத்தின் காரணமாக ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

தன்னுடைய கன்னத்தை கிள்ளினாலும், எரித்தாலும், அதில் பிளாஸ்டிக் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உணவு முறைகளின் மூலம் தனது உடலை நன்றாக பராமரிக்கின்றார் என்பதற்கான ரகசியம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்வின் போது, மேடையில் இருந்த நயன்தாராவை பார்த்து கீழே இருந்த ரசிகைகள் நீண்ட நேரமாக அவருடன் செல்ஃபி எடுக்க காத்திருந்தனர். இதை கவனித்த நயன்தாரா, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களிடம் பேசி, ரசிகைகளை மேடைக்கு அழைத்தார். அதன்பிறகு அவர்களுடன் வளைந்து வளைந்து செல்ஃபி எடுத்து, அனைவரின் மனதையும் மகிழ்வித்தார்.

- Advertisement -

Read more

Local News