Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பெருசு பட நடிகை நிஹாரிகா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமூக வலைதளங்களில் பிரபலமான நிஹாரிகா, கடந்த மார்ச் மாதத்தில் வெளியான ‘பெருசு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ள மூன்று புதிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், நிஹாரிகா தற்போது தெலுங்கு திரைப்படத் துறையில் தனது அறிமுகத்தை செய்ய உள்ளார். அவருடைய முதல் தெலுங்கு திரைப்படமான ‘மித்ரா மண்டலி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கல்யாண் மந்தினா, பானு பிரதாபா மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா இணைந்து, சப்தா அஸ்வா மீடியா ஒர்க்ஸ் மற்றும் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவங்களின் சார்பில் தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தை புதிய இயக்குனராக விஜயேந்தர் எஸ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஆர்ஆர் துருவன் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவை சித்தார்த் எஸ்ஜே கவனித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News