தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ், தற்போது சூர்யாவின் 45-வது திரைப்படமான “ரெட்ரோ” படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கார்த்திக் சுப்பராஜ், ஸ்டோன் பென்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் இதுவரை 15 திரைப்படங்களை தயாரித்துள்ளது.
தற்போது, அவர்கள் “பெருசு” என்ற புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இது ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் 16-வது திரைப்படமாகும். இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார், மேலும் அருண் ராஜ் இப்படத்திற்குப் பின்னணி இசையமைத்துள்ளார்.
வைபவ் மற்றும் சுனில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன், தீபா, நிஹரிகா, சாந்தினி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தின் கதை, வீட்டில் இறக்கும் ஒரு பெரியவரைச் சுற்றியும், அந்த இறுதி சடங்கில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.