Saturday, January 18, 2025

விடாமுயற்சி முற்றிலும் நான் உருவாக்கியது அல்ல… அஜித் சாருக்கும் பெரிய பங்குண்டு – இயக்குனர் மகிழ் திருமேனி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித்குமார் நடிப்பில் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது படம் “விடாமுயற்சி”.இந்தப் படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்தப் படம், பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் வெளியீடாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை, ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தை இயக்கியுள்ள மகிழ் திருமேனியின் சமீபத்திய பேட்டி ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “இந்தக் கதையை முற்றிலும் நான் உருவாக்கவில்லை. அஜித் சார் தானே இந்தக் கதையை எனக்கு சொன்னார். அஜித் சாரின் பொதுவான படங்களிலிருந்து இந்தக் கதாபாத்திரம் முற்றிலும் வேறுபட்டது. அவரே இந்த கதையை நான் இயக்க வேண்டும் என முடிவெடுத்தார். மேலும், அவர் என்னிடம் ‘நாம் இருவரும் நம்முடைய வழக்கமான கம்ஃபர்ட் ஸோன்ல் இருந்து வெளியேற வேண்டும். இப்படம் அப்படியாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

அதன் பின்னர் நான் திரைக்கதை எழுத்தில் வேலை செய்யத் தொடங்கினேன். ஆரம்பத்தில், கதையின் பின்னணியாக அரபு நாடுகளை வைத்துக்கொண்டு திரைக்கதை எழுதினேன். ஆனால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர், கதைக்கேற்ப நீண்ட, ஆள் நடமாட்டம் குறைவான நெடுஞ்சாலை தேவைப்பட்டதால், அஜித் சார் தாம் ‘அஜர்பைஜானில் படத்தை படமாக்கலாம்’ என்று கருத்து தெரிவித்தார். தயாரிப்பு நிறுவனமும் ஒப்புதல் அளித்ததால், முழு படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடைபெற்றது. என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News