வேவ்ஸ் 2025′ மாநாட்டில் பாகுபலி , கேஜிஎப்ஃ, புஷ்பா கல்கி போன்ற திரைப்படங்களைப் பற்றி தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகர் நாகார்ஜுனா. அதில், ‘புஷ்பா 2’ போன்ற திரைப்படங்கள் தெலுங்கு மாநிலங்களைத் தாண்டி நாடுமுழுவதும் அதிக வசூலைப் பெற்றன. பெரிய திரையில் இதுபோன்ற பிரம்மாண்டம் அதிசயங்கள் அனுபவிக்க ரசிகர்கள் ‘பாகுபலி’, ‘கேஜிஎப்’, ‘புஷ்பா’ போன்ற திரைப்படங்களை பெருமளவில் பார்க்கிறார்கள்.

அந்த வகையில் புஷ்பா ராஜ், ராக்கி பாய், பாகுபலி போன்ற ஹீரோக்களைப் பார்க்கும் ஆர்வம் மக்களில் அதிகமாகவே உள்ளது. நான் கூட தனிப்பட்ட முறையில் அந்த வகையான ஹீரோக்களையும் படங்களையும் பார்க்க விரும்புகிறேன்.
இந்த படங்கள் வெறும் ஹீரோக்களின் மீதான வரவேற்பால் மட்டுமல்ல, அவைகளில் இடம்பெற்ற வலுவான கதை மற்றும் உள்ளடக்கத்தால் வெற்றியை பெற்றன. ‘பாகுபலி’ திரைப்படத்தை ராஜமவுலி தெலுங்கில் உருவாக்கினார் என்றாலும், அந்த படம் உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றது என நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.