சுஜித் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் ‘ஓஜி’. இப்படம் முதல் நாளில் 154 கோடி வசூலைப் பெற்றது. அதன்பிறகு கடந்த நான்கு நாட்களில் 250 கோடி வசூலைக் கடந்துள்ளது.நான்கு நாட்களில் உலக அளவில் மொத்தமாக 252 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பவன் கல்யாண் நடித்து வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் புரிந்துள்ளது.
