பவன் கல்யாணின் ஓஜி படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மியின் வில்லனாக நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே அவர் உடல்நிலை சரியில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து ‘ஓஜி’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இம்ரான் ஹாஸ்மி குணமடைந்து திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.
