2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் மக்கள் கவனத்தை பெற்றவர் அர்ஜுன் தாஸ். அவரது தனிப்பட்ட குரல் ஓரு வித்தியாசமான ஸ்பெஷலாக இருந்து, அவருடைய முக்கிய பலமாக அமைந்துள்ளது. ‘மாஸ்டர்’, ‘அநீதி’, ‘குட் பேட் அக்லி’ போன்ற திரைப்படங்களில் அவர் அளித்த நடிப்பும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பாராட்டைப் பெற்றது. தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து வரும் ‘ஓஜி’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

பவன் கல்யாண் நடிப்பில் ஜூலை 24ஆம் தேதி வெளியிடவுள்ள ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அந்த ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே அர்ஜுன் தாஸின் பிண்ணணிக் குரல் ஒலிக்க, அது ட்ரெய்லருக்கு ஒரு தனிச்சிறப்பாக அமைந்திருக்கிறது.
இந்த அனுபவத்தைப் பற்றி அர்ஜுன் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், பவன் கல்யாண் அவர்களின் திரைப்பட ட்ரெய்லருக்கு என் குரலை கேட்டார்கள் என்றவுடன் நான் உடனே சம்மதித்தேன். எந்த விதமான சந்தேகமும் எழவில்லை. ‘இது உங்களுக்கே, சார், என்றே நான் உணர்ந்தேன் என்று பதிவு செய்திருந்தார்.இதற்கு ரீப்ளே செய்துள்ள பவன் கல்யாண் பதிலளித்து, “அன்பான சகோதரர் அர்ஜுன் தாஸ், உங்களுக்கு மிகவும் நன்றி.மிகவும் அபூர்வமாகவே நான் உதவி கேட்டிருக்கிறேன். அதனை நீங்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் குரலில் மேஜிக் கும், இனிமையும் இருக்கிறது, எனக் கூறி, பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.