மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன், நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛படை தலைவன்’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ஏற்கனவே இரண்டு முறை இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகமெங்கும் அடுத்தவாரம், ஜூன் 13ல் 500 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ், எல்.கே.சுதீஷ் கைப்பற்றி உள்ளார்.
