நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண், தனது இளைய மகன் மார்க் சங்கருடன் தொடர்புடைய ஒரு சம்பவத்தால் கவலையில் உள்ளார். பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர், வயது 10. இவர் சிங்கப்பூரின் ரிவர் வேலி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கல்வி பயின்று வந்தார்.

சமீபத்தில், அந்த பள்ளியில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு மாணவி உயிரிழந்ததுடன், பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பவன் கல்யாண், உடனடியாக சிங்கப்பூருக்குச் சென்றார். இந்தச் சூழ்நிலையில், மார்க் சங்கரின் உடல்நிலை குறித்தும் அவர் நிலைமை எப்படி உள்ளது என்பதையும் நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ளார். தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “எங்கள் மார்க் சங்கர் வீடு திரும்பிவிட்டார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடைய வேண்டும். ஆஞ்சநேயரின் அருள் மற்றும் கருணையால் அவர் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் இயல்பு நிலைக்குத் திரும்புவார்” என பதிவிட்டுள்ளார்.