தமிழ் திரைப்பட உலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் கூலி. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்பாபு, ரஜினிகாந்துடன் தன் நட்பைப் பற்றிய உரையாடல் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், சென்னையில் நாங்கள் ஒவ்வொரு திசையிலும் அலைந்து திரிந்த காலத்தில் தான் நான் ரஜினிகாந்தை சந்தித்தேன். எங்களிடம் எதுவும் இல்லாத அந்தத் தருணங்களில் உருவானது எங்கள் நட்பு. கடந்த 50 ஆண்டுகளாக அந்த நட்பு தொடர்கின்றது. இன்று கூட, எங்கு சந்தித்தாலும் நான் அவரை ‘பிளடி தலைவா’ என்று தான் அழைப்பேன். யாருக்காகவும் போலியாக நடிக்க மாட்டேன். அந்த நேர்மை, ரஜினிகாந்திற்கும் நன்றாகவே தெரியும்,என மோகன்பாபு பகிர்ந்திருக்கிறார்.