கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் இவர் கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து இவர் 3, வேதாளம், புலி, பூஜை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில், அறுவை சிகிச்சை மூலம் உடலில் மாற்றம் கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை என்று கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,


‘மக்கள் மற்றவர்களை அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அறுவை சிகிச்சை மூலம் உடலில் மாற்றத்தை கொண்டுவதில் எந்த தவறும் இல்லை. அது மற்றவர்களின் கட்டாயமின்றி செய்யும் வரைதான். ஆனால், ஒருவரின் உடலையோ அல்லது அழகையோ விமர்சிப்பதுதான் தவறு. ‘ என்றார். ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார்.