நடிகையும், அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாக உள்ளார். இந்நிலையில் அதே தொகுதியில் நடைபெற்ற ஒரு பாஜக நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, மணாலியில் இருக்கும் எனது வீட்டிற்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. ஆனால் இந்த வீட்டில் நான் வசிக்கவே இல்லை. ஆளே இல்லாமல் அந்த வீடு பூட்டப்பட்டிருக்கிறது என அதிர்ச்சியோடு கூறியுள்ளார்.
