Touring Talkies
100% Cinema

Saturday, May 31, 2025

Touring Talkies

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் ‘ஓ மேரி ஜான்’ வீடியோ பாடல் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னை 28, சரோஜா, கோவா போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் வைபவ். அதன் பிறகு ‘கப்பல்’, ‘மேயாத மான்’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பெருசு’.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, வைபவ் தற்போது ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வரும் அருண் கேசவும் இணைந்து இயக்கியுள்ளனர். இதில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். நகைச்சுவை மையமாக உருவாகியுள்ள இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, ஆனந்த் ராஜ், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்கள் கொண்ட இந்த திரைப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் “ஓ மெரி ஜான்” என்ற பாடலின் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News