Monday, November 18, 2024

இறுதிக்கட்ட படப்பிடிப்பு தம்மன்னா நடிக்கும் ஒடேலா 2 ! வெளியான BTS புகைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிப்பதோடு, தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகை தமன்னா. சமீபத்தில் அவரது’பப்ளி பவுன்சர்’ மற்றும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி, சிறந்த வரவேற்பைப் பெற்றன.

தற்போது, அவர் ஒடேலா 2′ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான.ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா தான் இயக்குகிறார். படத்தில் ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா, நாக மகேஷ், வம்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காந்தாரா’புகழ் அஜனேஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார், மற்றும் இதில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஒடேலா கிராமத்தில் துவங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பின் துவக்கத்தை குறித்த தமன்னாவின் புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News