தேவரா படத்திற்குப் பிறகு, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது திரைப்படமாக உருவாகிறது.

இந்தப் படத்திற்குப் தற்போது ‘என்டிஆர் – நீல்’ என்ற தற்காலிக தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இதற்குமுன், ருக்மணி வசந்த் மற்றும் டொவினா தாமஸ் ஆகியோர் இந்தப் படத்தின் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆர் கலந்து கொள்ளவில்லை. அவரின் காட்சிகள் மார்ச் மாதத்திலிருந்து படமாக்கப்பட உள்ளன.