Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

கமல் அவர்கள் பேசியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த பேச்சு தொடர்பாக எழுந்த விவகாரத்தைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இந்த விவகாரத்தை அரசியல் நோக்கில் பார்க்க வேண்டாமென கேட்டுக்கொண்டார்.

அவர் கூறியதாவது: “நாம் அண்டை மாநிலங்களாக இருக்கிறோம். ஒரே நாட்டின் குடிமக்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். எங்களது நீர்தொட்டிகள் தமிழகத்திற்கு நீர் அனுப்புகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எங்கள் மாநிலத்தில் வந்து வாழ்ந்து வருகின்றனர். நாம் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல; நண்பர்களாகவே இருக்கின்றோம்.

இந்த விவகாரத்தின் பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது என்பது பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. எனவே இதைப் பற்றி விரிவாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,” என்று அவர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News