பாலிவுட் சினிமாவில் பல விமர்சனங்களை சந்தித்து வரும் நடிகை குஷி முகர்ஜி, சமீபகாலமாக இவர் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் அதீத கவர்ச்சி உடையை அணிந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் இவரது உடைகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

சமீபகாலமாகவே பொது இடங்களுக்கு மிகவும் கிளாமரான கண்ணாடி இழையிலான உடைகளை அவர் அணிந்து வருவது, பெரும் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. இதனால் சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனாலும் தொடர்ந்து இதேபோன்று ஆடைகளை அணிந்து வரும் அவர் சமீபத்திய பேட்டியில். விமர்சனங்கள் என்னை எதுவும் செய்யாது. என் சுதந்திரத்தில் தலையிடுவதும் எனக்கு பிடிக்காது. எதற்கும் அடங்காதவள் நான். எனவே விமர்சிப்போர் பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.